மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!

01/09/2010 09:41

நம் பூமி சூரியனை மற்ற கோள்களுடன் சேர்ந்து சுற்றி வருகிறது. அதை சூரிய குடும்பம் என்று அழைக்கப்படுகிறது அதே போல மற்றொரு சூரியகுடும்பம் ஒன்றை தற்போது ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோப் லோவிஸ் என்பவர் தலைமையில் கண்டுபிடித்துள்ளனர்.

ஐந்து முதல் ஏழு கோள்களை உள்ளடக்கிய அந்த சூரியக் குடும்பம் நமது பூமியில் இருந்து 127ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இச்சூரியக் குடும்பம் பேரண்டத்தில் உள்ல மில்லியன் கணக்கான விண்மீன்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோள்களைக் கொண்டிருக்கக்கூடிய சூரியக் குடும்பங்களில் ஒன்றாக எச்டி10180 (HD10180) என்ற விண்மீனை மையமாகக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெளி உலகங்களில் இந்தப் புதிய உலகங்கள் மிகப்பெரியது" என இதை கண்டுபிடித்த வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Innerm